உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

L

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அவர்களாலும், இவற்றுடன் குணமாலை, பதுமையார் இலம்பகங் களையும் சேர்த்து மூலம் மட்டும் ப. அரங்க சாமிப்பிள்ளை ம் அவர்களாலும் (1883) நூன் முழுமையும் நச்சினார்க்கினியர் உரையுடன் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களாலும் (1887) வெளியிடப் பெற்றுள்ளது. பின், சைவசித்தாந்த சமாசம் மூலம் மட்டும் வெளியிட்டது (1941). பதவுரை விளக்கவுரைகளுடன் நூல் முழுமையும் இரண்டு தொகுதிகளாகக் கழகம் வெளியிட்டுள்ளது (1959). புறத்திரட்டில் எடுத்தாளப்பட்டுள்ள பாடல்கள் (142) நூற்று நாற்பத்திரண்டு. அவை வருமாறு:

6, 11, 12, 21, 22, 23, 24, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 79, 87, 118, 153, 154, 200, 201, 202, 203, 204, 241, 253, 254, 267, 268, 279, 280, 298, 299, 300, 301, 305, 314, 315, 333, 334, 335, 336, 348, 349, 350, 361, 362, 363, 364, 365, 366, 376, 377, 378, 379, 380, 381, 382, 383, 384, 385, 386, 387, 398, 406, 407, 408, 409, 439, 440, 441, 466, 467, 468, 470, 471, 472, 492, 493, 513, 566, 567, 597, 603, 609, 615, 657, 658, 659, 668, 677, 694, 710, 712, 713, 714, 715, 716, 717, 718, 719, 720, 721, 741, 766, 832, 833, 849, 850, 851, 852, 853, 854, 855, 871, 872, 873, 894, 895, 896, 909, 910, 911, 912, 1014, 1015, 1016, 1035, 1036, 1037, 1038, 1039, 1059, 1064, 1065, 1077, 1115, 1231, 1303, 1351, 1352.

14. சூளாமணி

சூளாமணி என்பது முடிமணி. அது முடிமணிபோல் அமைந்த நூலுக்கு ஆயிற்று. நன்னூற்கண் வரும், "முதனூல்” என்னும் நூற்பாவில் (48) "தன்மையாற் பெயர் பெற்றன சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் முதலாயின" என்பார் மயிலைநாதர். சூளாமணி என்னுஞ் சொல் 284, 329, 1519, 2127 ஆகிய நான்கு பாடல்களிலும் வருகின்றது. அன்றியும், காப்பியத் தலைவனான திவிட்டனது தந்தை பயாபதியை, “உலகின் முடிக்கோர் சூளாமணி ஆயினான்” (2127) எனக் கூறுகின்றது. இச்சிறப்பாலும் தன்மை யாலும் இந்நூற்பெயர் வந்த தெனலாம்.