உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

37

சூளாமணியின் ஆசிரியர் தோலா மொழித்தேவர் என்பதும், அவர் சமண சமயஞ் சார்ந்தவர் என்பதும்,1 கார் வெட்டி அரசன் விசயன் என்பான் காலத்தவர் என்பதும், தரும தீர்த்தங்கரர் என்பாரிடம் இணையற்ற ஈடுபாடு உடையவர் என்பதும்,

66

திக்கெட்டும் புகழ்படைத்த திறல்விசயன்

புயலனைய கையன் தெவ்வைக் கைக்கொட்டி நகைக்குமிகற் கார்வெட்டி யரையன்வள நாடற் கேற்பப் பொக்கெட்டும் பத்துமிலான் புகழ்த்தரும தீர்த்தன்மலர்ப் பதம்பூ சிப்போன் சொற்கெட்டா வரன்தோலா மொழிசூளா மணியுணர்வோர் துறைகண் டாரே

என்னும் பாடலால் அறியலாம். இந்நூல் சேந்தன் என்னும் அரசன் அவையில் அரங்கேற்றப் பெற்றதாகப் பாயிரத்து வரும் நான்காம் பாடலால் அறியலாம். இச்சேந்தன் அவனி சூளாமணி மாறவர் மனாக இருக்கவேண்டும் என்றும் அவன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகலாம் என்றும் சோழர் என்னும் நூலில் நீலகண்ட சாத்திரியார் குறிப்பார்.

சைன

தோலாமொழித்தேவர் குணபத்திரர் என்னும் ஆசிரியர் காலத்தவர் என்றும் அவர்காலம் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் என்றும் ந. சி. கந்தையா அவர்கள் குறிப்பார்.

தோலாமொழி, தோல்வி காணாத மொழியாம். “ஆர்க்குந் தோலாதாய்” என்றும் “தோலா நாவிற் சுச்சுதன்” என்றும் இரண்டு டங்களில் (1473, 308) இவ்வருஞ் சொல்லை இவர் பயன் (1473,308) படுத்துவது கொண்டு இவரை இப்பெயரால் அழைத்தனர் என்பர்.

2131 செய்யுட்களையுடைய இந்நூல் 1889ஆம் ஆண்டில் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. பின்னர்க் குறிப்புரை, மேற்கோள் ஆகியவற்றுடன் 1954ஆம் ஆண்டு டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக வந்தது. அரிய விரிவுரையுடன் இருபகுதிகளாகக் கழக வழி வெளிவந்துள்ளது.

1. கார்வெட்டி நகரம் ஆர்க்காட்டில் உள்ளது என்பார் ந.சி.க.