உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புறத்திரட்டில் எடுத்தாளப் பெற்ற சூளாமணிப் பாடல்கள் (79) எழுபத்தொன்பது. அவை வருமாறு:

66,95, 96, 119, 216, 245, 255, 308, 338, 339, 344, 345, 346, 347, 399, 400, 469, 481, 482, 483, 484, 485, 486, 487, 488, 489, 490, 491, 589, 590, 591, 592, 593, 594, 595, 596, 623, 660, 669, 670, 671, 681, 682, 683, 722, 731, 732, 733, 734, 735, 736, 737, 738, 739, 740, 777, 778, 779, 834, 835, 836, 856, 867, 868, 869, 870, 1008, 1009, 1178, 1291, 1292, 1302, 1353, 1354, 1383, 1402, 1435, 1440, 1441.

15. தகடூர் யாத்திரை

யாத்திரை என்பது 1செலவு என்னும் பொருட்டது. அதியமானுக்குரிய தகடூர்மேல் சேரமான் படைகொண்டு. சென்ற வரலாற்றைக் கூறுவது தகடூர் யாத்திரையாம். இதற்குத் ‘தகடூர் மாலை' என்னும் பெயரும் உண்டென்பது புறத்திரட்டால் புலப்படுகின்றது.

வரலாற்றைத் தழுவிச் செய்யப் பெற்றது தகடூர் யாத்திரை என்றும், வரலாறு நிகழ்ந்த காலத்திலேயே செய்யப் பெற்றது அன்று என்றும் கூறுவார் பேராசிரியர். “தொன்மை என்பது உரை விரா அய்ப் பழமையவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந் தேவனாற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன” என்பது அவர் வாக்கு (தொல். பொருள். 549). இவ்வுரையானும் தொல். பொருள். 485இல் “பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒரு பாட்டினை இடையிட்டுக் கொண்டு நிற்குங் குறிப்பினான் வருவன உரையெனப்படும். என்னை? பாட்டு வருவது சிறுபான்மையாகலின். அவை: தகடூர்

1. செங்கோன் தரைச் செலவு என்பதொரு நூல் தமிழிலக்கியத்தில் பேசப்படுகிறது. ஏழ்தெங்கு நாட்டு முத்தூரகத்தியன் பாடிய பாயிரத்துடன் 1909இல் மதுரைச் சுந்தரபாண்டியன் ஓதுவார் பதிப்பித்துள்ளார் என்பது அறியத்தக்கது.

2. தகடூர் என்பது இந்நாள் தருமபுரியாம். ஆங்கிருந்த அதியமான் கோட்டை 'அதமன் கோட்டை' என இன்று வழங்கப்பெறுகிறது.