உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

39

யாத்திரை போல்வன” என்று கூறுவதானும் தகடூர் யாத்திரை உரையும் பாடலும் விரவிச் செல்லும் நடையது என்பதை உணரலாம்.

தகடூர் யாத்திரை போரின் நேர்முகக் காட்சியே என்பது ஆராய்ச்சியாளர் துணிவு. "போரின் நேர்முகக் காட்சியாக நமக்குக் கிட்டியுள்ள தமிழ்ப்பாடல் தகடூர் யாத்திரை ஒன்றே எனலாம்” என்று' பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் குறிக்கிறார்.

266

‘தகடூர் யாத்திரைச் சரித்திரம் பாரதம் போன்று தாயத்தாரிடை நிகழ்ந்த போரின் வரலாற்றினை விளங்கக் கூறுவதாம். உற்று நோக்குவோர்க்குப் பாரத சரித்திரத்திற்கும் இந்நூற் சரித்திரக் குறிப்புக்களுக்கும் ஒற்றுமை பல காணப்படும்” என்பது அறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஆராய்ச்சி முடிவாம்.

66

3

மெய்ம்மலி மனத்தின்" எனத் எனத் தொடங்கும் பாடலை எடுத்துக் காட்டி, "இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும் பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது” என்றும், “கார்த்தரும் புல்லணல்” என்னும் பாடலை எடுத்துக் காட்டி, “இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது” என்றும் நச்சினார்க்கினியர் கூறுவதால் புலவர் பலர் பாடிய பாடற்றொகுப்பாக இருத்தல் கூடும் எனக் கருத இடமுளது. “கலையெனப் பாய்ந்த” என்னும் பாடலைக் காட்டி இது சேரமான் பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோர்க்கு அவர் கூறியது” என்று நச். (தொல். பொருள். 67) கூறுவதை நோக்கி "நேர்முகக்" காட்சியாகவே புலப்படுகின்றது.

66

தமிழர் வரலாற்றுச் செல்வமாகிய தகடூர் யாத்திரையை முழுமையாகக் காணமுடியாத தீயூழின் இடையே 44 பாடல்களையேனும் அறிதற்குப் பேறு தந்தது புறத்திரட்டேயாம்.

இதன்கண் வருவன:

1. தென்னாட்டுப் போர்க்களங்கள். பக். 111.

2. புறத்திரட்டு, முன்னுரை, பக். 46.

3. தொல். பொருள். 63.

4. மூன்று பாடல்கள் நச். உரையாடலும், ஒரு பாடல் தக்கயாகப் பரணி உரையாலும்

கிடைத்துள.