உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ் வளம் 17

10, 19, 227, 666, 667, 756, 776, 785, 786, 844, 995, 1241, 1251, 1257, 1258, 1274, 1301, 1304, 1314, 1315, 1316, 1317, 1318, 1319, 1320, 1321, 1342, 1343, 1370, 1371, 1372, 1373, 1374, 1375, 1376, 1377, 1378, 1382, 1404, 1405, 1406, 1407, 1438, 1454.

166

266

16. திரிகடுகம்

'திரிகடு கஞ்சுக் கோடு திப்பிலி மிளகு செப்பும்

'திரிகடு கஞ்சுக்கு மிளகு திப்பிலி”

என்பவற்றால் திரிகடுகமாவது யாது என்பது புலப்படும்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் முப்பொருள்களும் உடல் நோயை நீக்கி நலம் பயப்பதுபோல் அறியாமை நோயை அகற்றி மனநலத்தை ஆக்கும் மும்மூன்று கருத்துக்களைக் கொண்ட பாடல்களால் ஆகிய நூலுக்குப் பெயராயிற்று. 'திரிகடுகம் போலும்” என இதன் தொடக்கப் பாடல் இயம்புவதும் இந்நூற் பெயர்க்குரிய சான்றாகும்.

திரிக கடுகம், கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண் பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் மும் மூன்று கருத்துக்களைக் கூறுவது; ஒவ்வொரு பாடலின் மூன்றாமடி இறுதிச் சீரிலும் ‘இம்மூன்றும்' என்றாவது 'இம்மூவர்' என்றாவது தொகை குறிப்பிட்டுச் செல்வது; எளிமையும் நயமும் வாய்ந்த அருமை யுடைய பாக்களால் அமைந்தது.

66

இந்நூலை இயற்றிய ஆசிரியர் நல்லாதனார் ஆவர். ஆதன் என்னும் பெயர் மிகத் தொன்மையானது என்பதை “ஆதனும் பூதனும்” என்னும் 3தொல்காப்பிய நூற்பாவான் அறியலாம்.

“செல்வத் திருத்துளார் செம்மல் செருவடுதோள்

நல்லாத னென்னும் பெயரானே-பல்லார்

பரிவொடு நோய்வீயப் பன்னியா ராய்ந்து திரிகடுகஞ் செய்த மகன்”

1. சூடாமணி நிகண்டு 12 :13. 2. சேந்தன் திவாகரம் 12 : 31

3. தொல். எழுத்து. புள்ளி. 53.