உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

41

என்னும் வெண்பாவால் இவர் 'திருத்து' என்னும் ஊரினர் என்பதும், பேராற்றல் மிக்கவர் என்பதும் புலப்படும். இத்திருத்து தென் பாண்டி நாட்டது என்பர். இவர் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்பது ஆய்ந்தோர் துணிபு,

நல்லாதனார் வைணவ சமயஞ் சார்ந்தவர் என்பது,

“கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்

தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்-நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்

பூவைப்பூ வண்ணன் அடி

وو

என்னும் கடவுள் வாழ்த்துச் செய்யுளாற் போதரும். தாம் எடுத்துக் கொண்ட நூற் போக்குக் கியையத் திருமாலின் திருவடிகளின் முச்செய்கைகளைக் கூறி இணைத்த நயம் பாராட்டுக்குரியது.

புறத்திரட்டில் அமைந்துள்ள திரிகடுகப் பாடல்கள் (53)

ஐம்பத்து மூன்று. அவை வருமாறு:

3, 64, 65, 74, 126, 180, 181, 243, 271, 436, 437, 474, 475, 535, 545, 546, 547, 575, 654, 687, 691, 692, 726, 754, 935, 969, 970, 971, 972, 973, 974, 994, 1062, 1071, 1081, 1082, 1083, 1110, 1111, 1123, 1124, 1125, 1163, 1177, 1205, 1206, 1222, 1223, 1224, 1225, 1226, 1227, 1228.

17. நளவெண்பா

நிடத நாட்டு வேந்தன் நளனது வரலாற்றை வெண்பா யாப்பினால் கூறும் நூல் நளவெண்பா ஆகும். “வெண்பாவிற் புகழேந்தி” என்று பாராட்டப்பெறும் புகழேந்தியாரால் செய்யப் பெற்றது இந்நூல். இதன்கண் 424 பாக்கள் உள.

பாரதத்தில் கிளைக்கதையாய் அமைந்துள்ளது நளன் கதை. அதனைத் தமிழாக்கியவர் இருவர்; ஒருவர் புகழேந்தியார்; மற்றொருவர் அதிவீரராம பாண்டியர். முன்னவர் வெண் பாவையும், பின்னவர் விருத்தப்பாவையும் கொண்டனர். இரண்டும் நளன் வரலாற்றைக் கூறுவனவேயாயினும் நளவெண்பா நைடதத்தினும் பெருக விளங்குகின்றது என்பது உண்மை.