உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வளமிலா தார்க்கு வருவதோர் உறவிலை

1167. ஆர்த்த பொறிய வணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம் - நீர்த்தருவி தாழா வுயர்சிறப்பிற் றண்குன்ற நன்னாட வாழாதார்க் கில்லைத் தமர்.

இடராம் பொழுதில் தொடர்பார் சிலரே

1168. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா

இடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட

'தொடர்புடையோ மென்பார் சிலர்.

-நாலடியார் 283,285,286, 290, 113

வறியவர் வாய்ச்சொல் வளமாய்ச் செல்லா

1169. நல்லாவின் கன்றாயி னாகும் 'விலைபெறூஉம் கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போழ்தி னுழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

மனைவி மக்களும் மதியார் வறியரை

1170. பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது கொண்ட விரகர் குறிப்பினி னஃகுப் வெண்டறை நின்று வெறுக்கை யிலராயின் மண்டினர் போவர்தம் மக்களு மொட்டார்.

1171.

1. தொடர்புடைய.

-நாலடியார் 115

இல்லார் இடத்தே கல்வியும் புல்லெனும்

சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர் நல்லவை யாரும் நனிமதிப் பாரல்லர்

கல்வியுங் கைப்பொரு ளில்லார் பயிற்றிய புல்லென்று போதலை மெய்யென்று கொண்ணீ.

2. விலைபெறும்.