உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பல்வளம் உடையான் பழுமரம் போல்வான்

1172. தொழுமக னாயினுந் துற்றுடை யானைப் பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற் பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப.

இருளில் இட்ட இருண்மை இஃதாம்

1173. பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும் அருளி லறனு மமைச்சி லரசும்

இருளினு ளிட்ட விருண்மையி தென்றே

மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப.

355

-வளையாபதி 65, 66, 67, 68

105. இரவு

("பிறர் மாட்டுச் சென்று இரந்து கோடல்” - மணக். இ.பெ.அ:

திருக். 106.)

அகம்புகச் சொலார்முன் முகம்புக வேண்டா 1174. இல்லாமை கந்தா விரவு துணிந்தொருவர் செல்லாரு மல்லர் சிறுநெறி - புல்லா

அகம்புகுமி னுண்ணுமி னென்பவர்மாட் டல்லால் 'முகம்புகுத லாற்றுமோ மேல்.

-நாலடியார் 303

உள்ளது கரத்தலால் ஒருவரும் இரவேல்

1175. மறாஅ தவனும் பலரொன் றிரந்தாற்

2பெறாஅ பேதுறுத லெண்ணிப் - பொறாஅன் கரந்துள்ள தூஉ மறைக்கு மதனால் இரந்தூட்கும் பன்மையோ தீது.

1. முகம்புக.

2. பெறாஅ தவன்பெறுத.