உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மரம்போல் பவரிடம் இரந்தார் பெறுவதென்? 1176. மரம்போல் வலிய மனத்தினார் பின்சென் 'றிரந்தார் பெறுவதொன் றில்லை - குரங்கூசல் வள்ளியி னாடு மலைநாட வஃதன்றோ

பள்ளியு ளையம் புகல்.

-பழமொழி 384, 224

இயலறம் சிதைத்தான் இரந்தூண் வாழ்வான்

1177. செருக்கினால் வாழுஞ் சிறியவரும் பைத்தகன்ற அல்குல் விலைபகரு மாய்தொடியும் - நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொண்டானு மிம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார்.

கானலை நாடும் கலைமான் அன்னர்

1178. விசையி னோடுவெண் டேர்செலக் கண்டுநீர் நசையி னோடிய நவ்வி யிருங்குழாம் இசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய வசையில் மேன்மகன் போல வருந்துமே.

வளைத்தும் வாங்கும் வறுமைத் துயரம்

-திரிகடுகம் 25

-சூளாமணி 784

1179. ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்

1. றிரந்தாற்.

ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத் 2. பூத்துத்.