உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

'தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணார் முழவின் வயிரியர்

இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே

அறிவையும் அழிக்கும் அருளிலா வறுமை

1180. பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக் கயங்களி 2முளியுங் கோடை யாயினும் புழற்கா லாம்ப லகலடை நீழற் கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம் நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல் வான்றோய் நீள்குடை வயமான் சென்னி சான்றோ ரிருந்த 'வவையத் துற்றோன் ஆசா கென்னும் பூசல் போல

வல்லே களைமதி யத்தை யுள்ளிய

விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்

4பொறிப்புண ருடம்பிற் றோன்றியென்

அறிவுகெட நின்ற நல்கூர் மையே.

106. இரவச்சம்

357

-புறநானூறு 164, 266

("மானந் தீரவரும் இரவிற்கு அஞ்சுதல்' - பரிமே.

இ. பெ.அ: திருக். 107. நாலடி. 31. நீதிக். 62 இ.சா.அ: ப.பா.தி. 65 (இரவாமை))

உள்ளுவார் உள்ளம் உருக்கும் இரவு

1181. கரவாத திண்ணன்பிற் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை உள்ளுங்கா லுள்ள 5முருகுமா லென்கொலோ கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு.

1. தடுத்துக்.

2. முனியுங்.

3. வையகத். 4. பொறியுணர். 5. முருக்குமா.