உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வெறுப்பன செய்வார் இருப்பது கேடு

1196. தேர்ந்துகண் ணோடாது தீவினையு மஞ்சலராய்ச் சேர்ந்தாரை யெல்லாஞ் சிறிதுரைத்துத் - தீர்ந்த விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் நரகர்கட் கில்லையோ நஞ்சு.

கணையினும் பாய்ந்து காண்பது கண்ணே

1197. யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித் தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் - ஆம்பல்

மணவில் கமழு மலிதிரைச் சேர்ப்ப

கணையிலுங் கூரியவாங் கண்.

361

பழமொழி 41, 90, 123, 143

பெருநடை பெறினும் ஒருநடைச் சான்றோர்

1198. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா தொருநடைய ராகுவர் சான்றோர் - பெருநடை பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட வற்றா மொருநடை கீழ்.

முந்திரி மிகுந்தால் இந்திரனா எண்ணுவான் 1199. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல் - எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை இந்திரனா வெண்ணி விடும்.

செம்மணி பதிப்பினும் செருப்பு செருப்பே

1200. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம் எய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும்.