உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இன்னல் விளைப்பதில் இன்புறுங் கீழ்கள்

1201. கடுக்கெனச் சொல்வற்றாங் கண்ணோட்ட மின்றாம் இடுக்கண் பிறர்மாட் டுவக்கும் அடுத்தடுத்து

வேக முடைத்தாம் விறன்மலை நன்னாட ஏகுமா மெள்ளுமாங் கீழ்.

-நாலடியார் 343, 346, 347, 349

குற்றங் கூறுநா எற்றா னியன்றது?

1202. கணமலை நன்னாட கண்ணின் றொருவன் குணனேயுங் கூறற் கரிதாற் குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர்கட் கெற்றா 'னியன்றதுகொல் நா.

இன்னல் செய்வார்க் கெதுவுஞ் செயுங்கீழ்

1203. தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா உளிநீரார் மாதோ கயவர் - அளிநீரார்க்

கென்னானுஞ் செய்யா ரெனைத்தானுஞ் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

நன்றியை நினைத்து நலிவெலாம் பொறுப்பார்

1204. ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர் கயவர்க் கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்

2

எழுநூறுந் தீதாய் விடும்.

-நாலடியார் 353, 355, 357

நல்லவை அறியார் நாடுந் தொழில்கள்

1205. ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற

எஞ்சாத நட்பினுட் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலு மிம்மூன்றும் நற்புடையி'லாளர் 'தொழில்.

1. னியன்றதோ.

2. தாகில்.

3.லாகார்.

4. தொடர்பு.