உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

எச்சம் இழப்பார் இவர்கள் என்றது

1206. நன்றிப் பயன்றூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்ச மிழந்துவாழ் வர்.

363

-திரிகடுகம் 97, 62

மாசினை மறைக்க மாட்டாக் கீழ்கள்

1207. மாசு படினு மணிதன்சீர் குன்றாதாம் பூசிக் கொளினு 'மிரும்பின்கண் மாசொட்டும் பாசத்து ளிட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும்.

-நான்மணிக்கடிகை 98

கடையோர் கற்ற கல்வியுங் கடையே

1208. பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட 2தேம்படு தெண்ணீ ரமிழ்தமாம் - ஓம்பற் கொளியா முயர்ந்தார்கண் ஞான மதுவே களியாங் கடையாயார் மாட்டு.

108. பல்பொருள்

அறநெறிச்சாரம் 188

(குறித்த ஒரு பொருள் பற்றியன்றி ஒரு பாடற்கண் பல்வகைப்

பொருள்கள் அமையக் கூறியது.

இ.சா.அ: நாலடி. 37. (பன்னெறி))

தாயிற் சிறந்தொரு கோயிலும்இல்லை

1209. கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்

3

'ஒண்மைவாய்ச் சான்ற பொருளில்லை ‘யீன்றாளின் என்ன கடவுளு மில்.

1. மிரும்பின்றன். 2. தீம்புனற் றெண்ணி. 3. ஒண்மைய வாய. 4. ஈன்றாளோ டெண்ணக்.