உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வெல்வது வேண்டினால் வெகுளி விடுக

1215. இன்னாத வேண்டி னிரவொழுக விந்நிலத்து மன்னுதல் வேண்டி னிசைநடுக - தன்னொடு செல்வது வேண்டி னறஞ்செய்க வெல்வது வேண்டின் வெகுளி விடல்.

கல்லா உடலம் கழிபாழ் தனக்கு

1216. மனைக்குப்பாழ் வாணுத லின்மைதான் செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை யிருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா வுடம்பு.

365

-நான்மணிக்கடிகை 87, 1, 6, 15, 20

கல்விக்கு விளக்கம் கனிந்த உணர்வே

1217. மனைக்கு விளக்க மடவாள் மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும் ஓதிற் புகழ்சா லுணர்வு

வளமையோ டொக்கும் வனப்பாவ தில்லை

1218. அந்தணரி னல்ல பிறப்பில்லை யென்செயினுந் தாயிற் சிறந்த தமரில்லை யாதும்

வளமையோ டொக்கும் வனப்பில்லை யெண்ணின் இளமையோ 'டொப்பது மில்.

கெடுக்க வேண்டின் வெகுளி கெடுக்க

1219. கொடுப்பி 'னசனங் கொடுக்க விடுப்பின்

5

உயிரிடை யீட்டை விடுக்க - எடுப்பிற்

'கிளையு எழிந்தா ரெடுக்க கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல்.

1. இன்னாமை. 4. 60f60flш.

2. தனக்கினிய.

3. டொப்பதுவு.

5. கிளையுட் கழிந்தா ரெடுக்க.