உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அல்லவை செய்வார்க் கறமே கூற்றம்

1220. கல்லா வொருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் 'மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் அல்லவை செய்வார்க் கறங்கூற்றங் கூற்றமே 2இல்லிருந்து தீங்கொழுகு வாள்.

வளமிலாப் பொழுதில் வண்மை குற்றம்

1221. இளமைப் பருவத்துக் 3கல்லாமை குற்றம் வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞரில் போழ்திற் சினங்குற்றம் குற்றந் தமரல்லார் “கையகத் தூண்.

-நான்மணிக்கடிகை 103, 33,80,83,92

ஈவார் முகம்போல் இலங்கும் திங்கள்

1222. கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலிற் றோன்றல்

இரப்பவர்கட் டேய்வேபோற் றோன்றல் - இரப்பவர்க்கொன் றீவார் முகம்போ லொளிவிடுத லிம்மூன்றும்

ஓவாதே திங்கட் 5குள.

அறநெறி துலங்க அருநூல் செய்க

1223. ஈதற்குச் செய்க பொருளை யறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்றும் இருளுலகஞ் சேராத வாறு.

மாதம் மூன்று மழைபெய வித்து

1224. செந்தீ முதல்வ ரறம்நினைந்து வாழ்தலும் வெந்திறல் வேந்தன் முறைநெறியிற் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுந் திங்கள்மும் மாரிக்கு வித்து.

1. மெல்லிலை.

2. இல்லத்துத்.

3. கில்லாமை.

-திரிகடுகம்

4. இல்லகத். 5. குணம். 1222. இப்பாடல் திரிகடுகப் பதிப்புக்களில் இடம்பெறவில்லை.