உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இல்ல புகழ்தலில் இனிது வைதல் 1230. தெளிவிலார் நட்பிற் பகைநன்று சாதல் விளியா வருநோயி னன்றால் - அளிய இகழ்தலிற் கோற லினிதேமற் றில்ல புகழ்தலின் வைதலே நன்று.

-நாலடியார் 170, 219

விண்ணும் மண்ணும் வீழும் அடிக்கீழ்

1231. அற்றவர் வருத்தம் நீக்கி

யாருயிர் கொண்டு நிற்குந்

துற்றவி ழீதல் செய்யிற்

றுறக்கத்திற் கேணி யாகும்

உற்றுயி ரோம்பித் தீந்தே

னூனொடு 'துறக்கு மாயின்

மற்றுறை யில்லை விண்ணு

மண்ணுநும் மடியவன்றே.

109. நிரைகோடல்

-சீவகசிந்தாமணி 2927

(பகைவர் நாட்டின்மேல் படை யெடுக்கக் கருதுவார் அதற்கு அடையாளமாக அவர் தம் நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வருதல் நிரை கோடலாம். நிரை - பசு. கோடல் கொள்ளல். இச்செயற்குச் செல்வார் வெட்சிப் பூச்சூடிச் செல்வாராகலின் இது 'வெட்சி’ யென்று கூறப்பெறும். ஆகோள், நிரைகவர்தல், ஆதந் தோம்பல் என்பதுவும் இது.

மேற்கோள்: தொல். பொருள். 57; பு.வெ.மா. 1. "வெட்சி நிரை கவர்தல்" வீரசோ. பொருள். 21. மேற்.) பாருள்.21.மேற்.)

அடையார் முனைகெட விடையாயங் கொள்க

1232. மண்டு மெரியுள் மரந்தடிந் திட்டற்றால்

1. துறப்பராயின்.

கொண்ட கொடுஞ்சிலையன் கோறெரியக் - கண்டே 2. கொடுஞ்சிலையின்.