உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அடையார் முனையலற வையிலைவேற் காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து.

வீழ்ந்தனர் வீரர்; சூழ்ந்தன புட்கள்

1233. சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார் வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் - தாழ்ந்த குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த புலவுக் கணைவழிபோய்ப் புள்.

கடுத்து வரினும் கலங்கா வீரன்

1234. புல்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வில்மே லசைஇயகை வெல்கழலான் - தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டு நெடுவரை நீழல் நிரை.

369

-புறப்பொருள் வெண்பாமாலை 1, 10,11

கள்ளின் விலையாம் களங்கொள் வளனே

1235. அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண் வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கண் செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி வரிச்சிலையாற் றந்த வளம்.

-புறப்பொருள் வெண்பாமாலை 16

வெட்சி சூடி விரைந்து செல்வோர்

1236. வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியாற்

செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும்

ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ

போர்க்குந் துடியொடு புக்கு.

பாலால் நனைவது போலு மிவ்வூர்

1237. வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலால் தாள்வ லிளையவர் தாஞ்சொல்லின் - நாளைக்