உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

இளங்குமரனார் தமிழ் வளம் 17 கனைகுரல் நல்லாவின் கன்றுள்ளப் பாலின் நனைவது போலுமிவ் வூர்.

கொற்றவை போரில் கொற்றங் கொடுக்க

1238. வந்த நிரையி னிருப்பு மணியுடன்

எந்தலை நின்றலை யான்றருவன் - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு.

நிரையே அன்றி நிலமும் கிட்டும்

1239. திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோ னேற்றுரைத்த நற்சொல் - நிரையன்றி எல்லைநீர் வைய மிறையோற் களிக்குமால் வல்லையே சென்மின் வழி.

யானைப் படாமெனத் தானை சென்றது

1240. பிறர்புல மென்னார் தமர்புல மென்னார்

விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்றார் - நிரையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானை படாஅ முகம்படுத் தாங்கு.

-பெரும்பொருள் விளக்கம்

விரிச்சி வேண்டா; வெற்றி நமதே

1241. நாளும் புள்ளுங் கேளா வூக்கமோ டெங்கோ னேயின னாதலின் யாமத்துச் 'செங்கால் வெட்சியுந் தினையுந் 'தூஉய் மறிக்குரற் குறுதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா

எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே.

1. செங்கோல்.

2. தூவி.

-தகடூர் யாத்திரை