உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

இளங்குமரனார் தமிழ் வளம் 17 றுளப்பட்ட வாறெல்லா மொள்வாள் கவரக் களப்பட்டான் றோன்றான் கரந்து.

-புறப்பொருள் வெண்பாமாலை 27

மடிநிரை மீளாது மீளா மறவன்

1245. அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை

மீளாது மீளான் விறல்வெய்யோன் யாதாங்கொல் வாளார் துடியார் வலம்.

கங்கைப் பெருக்கென எங்கும் எழுந்தார் 1246. கங்கை கவர்ந்தாங்குக் கானப் பெருங்கவலை எங்கு மறவ 'ரிரைத்தெழுந்தார் - நுங்கிளைகள் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.

உலகெலாம் சுமக்கும் உரனுடை வீரர்

1247. கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருதாதா 2ருள்ளத் துரந்து நிரைமீட்ட தோள்.

வீடுகாண் விருப்பில் விரையும் நிரைகள்

1248. 3கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையு நிரையென்னோ

தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவும்

மள்ளர் நடவா வகை.

-பெரும்பொருள் விளக்கம்

ஆவைத் தழுவி அன்னை கலுழ்ந்தாள்

1249. காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான் மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து

1. ரியைந்தெழுந்தார்.

2. ருள்ளந்.

3. கல்லெழு.