உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஓம்பேன் என்னில் தேம்பு பேடியேன்

1303. தன்பால் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னும் இன்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலாம் நன்பாற் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை யோம்பே னெனில்யானவ னாக வென்றான்.

389

சீவகசிந்தாமணி 443

இரப்போற் குதவாக் கரப்போன் சிறுமை

1304. கலிமா னோயே கலிமா னோயே

நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன்

உள்ளழித்துப் புகேஎ னாயி னுள்ள

திரப்போ னின்மை கண்டும்

கரப்போன் சிறுமை யானுறு கவ்வே.

-தகடூர்யாத்திரை

இரப்போர்க் கீயா இன்மையான் உறுவேன்

1305. நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்

இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றூறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை 'அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி

1. அருஞ்சமந் ததையத்.