உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மாங்குடி மருதன் றலைவ னாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர

இரப்போர்க் கீயா வின்மையா னுறவே.

எதிர்க்குவோன் துஞ்சுபுலி இடறிய சிதடனாம்!

1306. மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி ஈயென விரக்குவ ராயிற் சீருடை

முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்

இன்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத் தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென் னுள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக்

கழைதின் யானைக் காலகப் பட்ட

வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்

'வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய

தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே.

118. படைச் செருக்கு

-புறநானூறு 72, 73

(படையினது வீர மிகுதியையும், வெற்றிச் சிறப்பினையும் கூறுதல். படைவீரர் செருக்கிக் கூறலும் இது.

மேற். பு.வெ.மா. 47, 134.)

சிறுசுடர் முன்னர்ப் பேரிருட் படையாம்

1307. உறுசுடர் வாளொ டொருகால் விலங்கிற் சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் - எறிசுடர்வேற்

1. வருந்தவொற்றே.