உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வன்றலை யுடல்புக்குக் குளிப்ப முகங்கரிந் துயிர்போகு ‘செந்நெறி பெருமையிற் பொருகளத்து நின்நன நெடுஞ்சேட் பொழுதே

-

407

- (ஆசிரியமாலை)

நோக்கி நோக்கி நோயற நகுவோன்

1370. கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் தார்ப்பற்றி யேர்தருந் தோணோக்கித் -தார்ப்பின்னை நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித்தன் மானோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும்.

கரிமேல் அன்றி எறியான் வேலை

1371. இகழ்த லோம்புமின் புகழ்சான் மறவர் கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசைப் பண்ணமை புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென வேந்தூர் யானைக் கல்ல

தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே.

புண்கூர் யானையான் கண்படை பெறாஅன்

1372. அதிரா தற்ற நோக்கு ஞாயிலுட்

கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் எதிரிய திருவி னிளையோ னின்றுந்தன் குதிரை தோன்ற வந்துநின் றனனே அவன்கை யொண்படை யிகழ்த லோம்புமின் விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாஅன் வைகின னிவன்கைத் திண்கூ ரெஃகந் திறந்த

புண்கூர் யானை நவில்குரல் கேட்டே.

-தகடூர் யாத்திரை

1. யரவுக்கடுங்.

2. சென்னெறி.