உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சேருபடு.

புறத்திரட்டு

மேலோர், தெய்வ மல்லன் மகனே நொய்தாங்குத் தெரியல ரெடுத்த பாசிலைக் கண்ணி

வெருவத் தக்க வேலி னோன்வேல்

பைய நிமிர்ந்து பருந்தி னோடிக்

கழிந்தார்த் தன்றவ னெறிந்ததை கழறொட்

டேந்துவரை யிவரும் புலிபோல்

வேந்துவந் தூரும் வெஞ்சினக் களிறே

உள்ளினும் நடுக்கும் ஒருவே லோனே

1377. நிலையமை நெடுந்திணை யேறி நல்லோரி னிலைபொலி புதுப்பூண் கணவனொ டூடிச் சிந்தி யன்ன 'சேடுபடு வனப்பிற் புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின் உள்ளினும் பனிக்கு மொருவே லோனே குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம்

அணிநல் யானைக் கூறளக் கும்மே.

தாயும் யாயும் உடன்மூழ் குபவே

1378. வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின் உருவக் குதிரை யொருவே லோனே இருகை மாக்களை யானஞ் சலனே நாற்கை மாக்களிந் நாட்டகத் தில்லை

அவனும், தாரொடு துயல்வருந் தயங்குமணிக் கொடும்பூண் மார்புடைக் கருந்தலை யெற்குறித் தனனே

யானும், கடிகம ழுவகைக் கைவல் காட்சியென்

றுடியவற் கவனரை யறுவை யீந்தனனே

அதனால், என்னெறிந்து பெயர்த லவற்குமாங் கரிதே

அவனெறிந்து பெயர்த லெமக்குமாங் கரிதே

அதனால், என்ன தாகிலு மாக முந்நீர் நீர்கொள் பெருங்குளந் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சங் குளிர்ப்ப வவன்றாய்

409