உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

இளங்குமரனார் தமிழ் வளம்

மூழ்குவ ளொன்றோ வன்றே லென்யாய் மூழ்குவ ளொன்றோ வன்றியவன்

றாயும் யாயு முடன்மூழ் குபவே.

123. குதிரை மறம்

17

-தகடூர்யாத்திரை

(போர்க் கலையில் தேர்ச்சி மிக்க குதிரையின் வீரத்தை

மிகுத்துக் கூறியது.

மேற்: தொல். பொருள். 72. பு.வெ.மா. 133.)

தானை மறவீர் தாங்கன் மின்மா

1379. தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறல்மறவிர் ஓங்கல் மதிலு ளொருதனிமா - ஞாங்கர் மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார் உயிருணிய வோடி வரும்.

கணையின் முந்திக் களம்வரும் குதிரை

1380. குந்தங் கொடுவிற் குருதிவேல் கூடாதார் வந்த வகையறியா வாளமருள் - வெந்திறல் ஆர்கழல் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை வார்கணையின் முந்தி வரும்.

-புறப்பொருள் வெண்பாமாலை, 90, 133

குதிரைக் குளம்பு பொன்னால் ஆயதோ?

1381. நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யறநிமிர்ந்து பொங்கா - அரசர்தம் முன்முன்னா 'வீழ்ந்தார் முடிக ளுதைத்தமாப் பொன்னுரைகற் போன்ற குளம்பு.

-முத்தொள்ளாயிரம் 18