உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

1416.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

'பொருநரை விலக்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து 'வெளிதுவிரித் துடீப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்ல தில்லோள்

செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே.

ஈராற் றொருமரம் ஒக்கும் பாய்மா

மாவா ராதே மாவா ராதே

எல்லார் மாவும் வந்தன வெம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த

செல்வ னூரு மாவா ராதே

இருபேர் யாற்ற வொருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல

உலைந்தன்று கொல்லவன் மலைந்த மாவே.

எல்லார் மனையுங் கல்லென் றனவே

1417. வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி 'பாடவும் நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும் எல்லா மனையுங் கல்லென் றவ்வே வேந்துடன் றேவான் கொல்லென நெடிதுவந் தன்றா னெடுந்தகை தேரே.

விடலை தாயின் விம்மிதம் என்னே!

1418. கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண் 5வேந்துவாய் மடித்து வேறலைப் பெயரித் தோறுவைத் தெழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின் வருபடை போழ்ந்து வாய்ப்படை விலங்கி இடைப்படை யழுவத்துச் சிதைந்து வேறாகிய சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி வாடுமுலை யூறிச் சுரந்தன

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

1. பெருநிரை.

4. படரவும்.

-புறநானூறு 279, 273, 296, 295.

2. முயங்கி.

5. வெந்துவாய்.

3. வெளிறுவிரித்.