உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

126. களம்

421

(ஏர்க்களத்தில் நெற்கதிரை அடித்து மிதித்துச் சவட்டுவது போலப் போர்க்களத்தில் படைகளைச் சவட்டி அழித்தலைக்

கூறுவது.

மேற்: தொல். பொருள். 76. பு.வெ. மா. 159. கள வழி நாற்பது.)

கவளக் கைகள் பவளப் பைகள்!

1419. கவளங்கொள் யானைதன் 'கைதுமியப் பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோல் - 2திவளொளிய ஒண்செங் குருதி யுமிழும் புனனாடன் கொங்கரை யட்ட களத்து.

கதிரோன் விளங்கும் கருமலைக் காட்சி 1420. உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பருதி சுமந்தெழுந்த யானை - இருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து.

தச்சர் பட்டடைத் தன்மைய போர்க்களம்

1421. கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் வினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால் பொருத களம்.

பெண்ணையந் தோப்பில் பெருவளி புக்கது 1422. திண்டோள் மறவ ரெறியத் திசைதோறும்

பைந்தலை பாறிப் புரள்பவை - நன்கெனைத்தும் பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே

1. கைதுணிக்கப்.

2. திகழொளிய.