உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

செங்குளம் வடிந்து செல்லுங் காட்சி

1427. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப் போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி

கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன்

ஆர்த்தம ரட்ட களத்து.

423

-களவழி நாற்பது, 26, 35, 36, 22,

2

குடைமறை இகலன், குளிர்மதி முயலாம்

1428. படைப்பொலிதார் மன்னர் பரூஉக்குடர் மாந்திக் குடைப்புறத்துத் துஞ்சு மிகலன் - இடைப்பொலிந்த திங்களிற் றோன்று முயல்போலுஞ் செம்பியன் செங்கண் சிவந்த களத்து.

மூங்கில் எரியும் முளிபுதர்க் காடு

-களவழி நாற்பது

1429. கைபொருத வோசையாற் கண்ணுமிழ்ந்த செந்தீயான் மெய்பொருது தோய்ந்தெழுந்த வெம்புகையான் - ஐயோ வெதிர்வேங் கடுங்கானம் போன்றதே வெம்போர் எதிர்வேந்தர் செய்த விடம்.

பரிசு கண்டு குரவை ஆடுதல்

1430. வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து.

-பாரதம்

1.ளொண்மதியை.

2. பெய்தலிற்.

1428 இப் பாடல் களவழிநாற்பதில் இடம்பெற்றிலது.

-பெரும்பொருள் விளக்கம்