உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நரியும் வெருவி நண்ணா வெங்களம்

1431. வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி - நரிவெரீஇச்

சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம்.

புண்ணுற் றழைக்கும் புதுமை நரிகள்

1432. மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து புண்ணுற் றழைக்குங் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம்.

சேஎயின் களத்தில் பேஎயின் விளக்கம்

1433. மூடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி - எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம்.

காவலன் பட்டது களிறும் பட்டது

1434. 'ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன்

தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி - யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்ததே 2பல்யானை யட்ட களத்து.

-முத்தொள்ளாயிரம் 28, 29, 30, 31

புற்றெடுத் தனைய பொருகளத் தன்மை

1435. பெருகிய குருதியுட் பிறக்குஞ் செந்தடி யறுகுடை யளற்றினு எழுந்திப் பாகமோர் சொரிகதிர்க் கோடக முடிகள் தோன்றலாற் பொருகளம் புற்றெடுக் கின்ற 'போன்றவே.

1. ஏனையார்.

2. பல்வாயா (ர)

-சூளாமணி 1397