உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

127. இரங்கல்

425

(மண்ணவர் மயங்க விண்ணுலகு சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது. கையறுநிலை என்பதும் இது.

மேற். தொல்.பொருள். 79. பு.வெ.மா. 31; 80; 267; 274.) அறத்தின் வாயிலை அடைத்தது வேலே

1436. போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன் ஊர்க்கு முலகிற்கு மோருயிர்மன் - யார்க்கு மறந்திறந்த வாயி லடைத்ததே யண்ணல் நிறந்திறந்த நீணிலைய வேல்.

அழுதார் ஆற்றில் ஆடுங் கூகை

1437. முன்புறந் தான்காணு மிவ்வுலக மிவ்வுலகிற் றன்புறங் கண்டறிவார் தாமில்லை - அன்பின் அழுதார்க ணீர்விடுத்த வாறாடிக் கூகை

3

கழுதார்ந் திரவழங்குங் காடு.

-புறப்பொருள் வெண்பாமாலை 80, 274

தோற்கண் ஆதலால் துடிகள் அழுதில

1438. இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க. வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி.

-தகடூர் யாத்திரை

உலகெலாம் ஒடுக்கும் ஒருபெருங் காடு

1439. உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ டிலைநெடுவே லோனை யிழந்து.

1. தொக்குமே.

2 நீளிலை.

1439. இப்பாடல் எந்நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 3. வாறோடிக்.