உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உலக மேத்தும் உனக்கும் ஒழிவோ?

1440. அரச ரேறே யடலாழி

வலவா யார்க்குந் தோலாதாய் புரிசை நகர்நூற் றொருபதுடைப்

பூமி முழுதுந் தானாண்டோய்

உரைசெய் துலகம் பாராட்டு

மொளியா யோடை யானையாய்

வரைசெய் தனைய திரடோளாய்

மறைதல் பொருளோ வயவேந்தே.

காவல் முனிந்து கடந்தாய் கொல்லோ!

1441. மூரி முந்நீ ருலகங்கள்

முழுதுங் காவல் முனிதாயோ

ஆரு மில்லா வடியோங்கள்

'வழிபா டாற்ற மாட்டாயோ

சீரின் மன்னும் வளநாடுந்

தெய்வப் படையுஞ் செல்வமுமிப்

பாரின் மன்னர் பிறர்கொள்ளப்

பணித்த தென்னோ படைவேந்தே.

-சூளாமணி 1473 1481,

எள்ளிருக்க இடமற ஏனோ துளைத்தது?

1442. வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த

திருமேனி மேலுங் கீழும்

எள்ளிருக்கு மிடமின்றி யுயிரிருக்கு மிடநாடி யிழைத்த வாறோ

சுள்ளிருக்கு மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கு மெனக்கருதி யுடல்புகுந்து தடவியதோ வொருவன் வாளி,

2. அடிபா ராட்ட.

-இராமா. உயுத்த 3906