உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பலரோ டுண்டோன் பிண்டமுண் டனனோ

1446. நோகோ யானே தேய்கமா காலை

பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்

தன்னமர் காதலி புன்மேல் வைத்த

இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்

உலகுபுகத் திறந்த வாயிற்

பலரோ டுண்டல் மரீஇ யோனே.

-புனறநானூறு 221, 234

இடுக வொன்றோ! சுடுக வொன்றோ!

1447. தொடியுடைய தோண்மணந்தனன்

கடிகாவிற் பூச்சூடினன்

தண்கமழுஞ் சாந்து நீவினன்

செற்றோரை வழிதபுத்தனன்

நட்டோரை யுயர்வு கூறினன்

வலியரென வழிமொழியலன்

மெலியரென மீக்கூறலன்

பிறரைத்தா னிரப்பறியலன்

இரந்தோர்க்கு மறுப்பறியலன்

வேந்துடை 3யவையத் தோங்குபுகழ் தோற்றினன்

வருபடை யெதிர்தாங்கினன்

பொருபடை புறங்கண்டனன்

கடும்பரிய மாக்கடவினன்

நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்

ஓங்கியல களிறூர்ந்தனன்

'தீஞ்சேற்ற தசும்புதொலைச்சினன்

பாணுவப்பப் பசிதீர்த்தனன்

மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச் செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்

இடுக வொன்றோ சுடுக வொன்றோ

படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.

1. பைத லொக்கற் றழீஇ.

2. வழிசெகுத்தனன்.

1. யவையகத்.