உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வித்தட் டுண்ட விரகிலாக் கூற்றம்

3

1448. நனிபே தையே நயமில் கூற்றம் விரகின் மையின் வித்தட் டுண்டனை இன்னுங் காண்குவை நன்வா யாகுதல் ஒளிறுவாள் மறவருங் களிறு மாவும் குருதியங் குரூஉப்புனற் பொதுகளத் தொழிய நாளு மானான் கடந்தட் ‘டென்றுநின் 5வாடுபசி யருத்திய வசைதீ ராற்றல் நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண் வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி அனையோற் கொண்டனை யாயின் இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.

இன்னாக் கூற்றம் என்போல் விதிர்க்க

1449. ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே உய்த்தனென் கொளினே மார்பெடுக் கல்லேன் என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை இன்னா துற்ற வறனில் 'கூற்றே

நிரைவளை முன்கை பற்றி

வரைநிழற் சேர்கம் நடத்திசிற் சிறிதே.

சாத்தன் மாய்ந்தபின் பூத்தியோ முல்லை!

1450.இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

2

பாணன் சூடான் பாடினி யணியாள்

ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.

429

-புறநானூறு 239, 227, 255, 242

1. தீஞ்செறி.

2. பெருதகளத்.

3. கடிந்தட்.

4. டுண்டுநின்

5. வாயபசி.

6. வண்டு மூசுதார். 7. சூரே.

8. கொள்ளான்.