உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வெளில்பா ழாக விம்மிய புன்கண்

1451. பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த இருங்களி றிழந்த பைதற் பாகன்

அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை வெளில்பா ழாகக் கண்டு கலிழ்ந்தாங்குக் கலங்கினெ னல்லனோ யானே பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய

பேரிசை மூதூர் மன்றங் கண்டே.

தழையாம் அல்லி உணவும் ஆயது

1452. அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

இளைய மாகத் தழையா யினவே, இனியே பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும்

அல்லிப் படூஉம் புல்லா யினவே.

பொய்கையும் தீயும் ஒக்கும் எனக்கே

1453. பல்சான் றீரே பல்சான் றீரே

செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா

'தடகிடை மிடைந்த கைபிழி பிண்டம்

வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட

வேளை வெந்தை வல்சி யாகப்

பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரே மல்லே மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம்

நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற

1. தடையிடைக் கிடந்த.