உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வள்ளித ழவிழ்ந்த தாமரை

நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே.

431

-புறநானூறு 220, 248, 246

ஈண்டுநின் றணிமின்! எய்துவிர் புகழே!

1454. இழுமென முழங்கு முரசமொடு குழுமிய ஒன்னார் மள்ளர்த் தந்த முன்னூர்ச் சிறையில் விலங்கிச் செவ்வே லேந்தி யாண்டுப்பட் டனனே நெடுந்தகை ஈண்டுநின் றம்ம வணியில்பெரும் புகழே.

ஆர்தர அறியா அஞ்சுவரு காடு

1455. நாய்ப்பிண வொடுங்கிய கிழநரி யேற்றை 'கிளைக்கு மிறும்பிற் றெறுவரக் கூடிய கூற்றுயிர் கொண்ட வுடம்புகரி பறந்தலைப் பாற்றிய சுடலைப் பல்குர றெழித்தே பார்பொரு பனிக்கடல் போல

வார்தர வறியா வஞ்சுவரு காடே.

128. வென்றி

-தகடூர்யாத்திரை

(வாகைப் பூவைப் புனைந்து பகைவேந்தனைக் கொன்று ஆரவாரித்தலைக் கூறுவது. வாகை என்பதும் இது.

மேற்: தொல். பொருள். 18. பு.வெ.மா.155. "போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம்” வீரசோ. பொருள். 21. மேற்.)

சூடினான் வாகை; பாடினார் புலவர்

1456. சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் சூடுதலும் பாடினார் தொல்புகழ் பல்புலவர் - கூடார்

1. யிளைக்கு.

1455. இப் பாடல் எந் நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை.