உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மாறன் அடிக்கண் மற்றையோர் முடிப்பூ

1466. செங்க ணெடியான்மேற் றேர்விசைய னேற்றியபூப் பைங்கண்வெள் ளேற்றான்பாற் கண்டற்றால் - எங்கும் அடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும்.

மார்பில் மறுவிலா மாயன் மாறன்

1467. கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்ப் பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால் - யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு.

செழுமதி போலும் சேரன் கோதை

1468. வாளிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் வானத்து மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான்.

வையகம் நிழல்செயும் வளவன் தண்குடை

1469. மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமா - எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை.

-முத்தொள்ளாயிரம் 34, 35, 36, 37, 38

பாண்டியன் பதியிற் படுவ முத்தமிழ்

1470. பார்படுப செம்பொன் பதிபடுப 'முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் - சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேற்

றலைபடுப தார்வேந்தர் மார்பு.