உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வேலுக் கஞ்சும் ஞாலத்தரசு

1471. அருமணி யைந்தலை யாடரவம் வானத்

துருமேற்றை யஞ்சி யொளிக்கும் - செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே

அங்கண்மா ஞாலத் தரசு.

புலவுஞ் சாந்தும் பொருந்தும் ஒள்வேல்

1472. அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வேல் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி

கொண்டாடும் பக்கமு முண்டு.

கதவந் திறந்து களிக்கத் தகுநாள்

1473. கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணார்தந் தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாட் போர்வேந்தன் பூச லிலன்.

சிலம்பி செய்த சிறுதவ றென்ன?

1474. அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் - எந்தை இலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு.

437

-முத்தொள்ளாயிரம் 39, 40, 41, 42, 43

மாறன் முன்னர் மாறேற் பார்யார்?

1475. திறலொடு தீருந்தீப் பூமிய னல்லன் மறலொடு மைந்து தருக்கிப் - பிறரொருவர் தென்ன னிளங்கோத் திருமால் வழுதிமுன் மன்னர்யார் மாறேற் பவர்.

1. முத்தமிழ் நூல்.

1475 இப்பாடல் எந்நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை.