உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மண்ணெலாம் தாங்கும் தொண்டை யான்தோள் 1476. கருங்கலி முந்நீரின் மூழ்காத முன்னம் இருங்கடி மண்மகளை யேந்தினவே யாயிற் பெரும்பெய ரேனத் தெயிறனைய வன்றே சுரும்பறை தொண்டையான் தோள்.

-இரும்பல்காஞ்சி

இடையன் செல்லா இரும்புலிக் காடு

1477. எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

உடையோர் போல விடையின்று குறுகிச் செம்மல் நாளவை யண்ணாந்து புகுதற் கெம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே இரவலர்க் கெண்மை யல்லதுபுரவெதிர்ந்து வானம் நாண வரையாது சென்றோர்க் கானா தீயுங் கவிகை 'வண்மைக் கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப் பாசிலைத்தொடுத்த வுவலைக் கண்ணி மாசு ணுடுக்கை மடிவா யிடையன் சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத் தற்றே

வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே.

செங்கதிர் ஒவ்வா சேரலா தற்கே 1478. வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப ஒடுங்காவுள்ளத் தோம்பா வீகைக் கடந்தடு தானைச் சேர லாதனை

1. வன்கைக்.

யாங்கன மொத்தியோ வீங்குசெலல் மண்டிலம்

1482 இப்பாடலின் பின் ஏழு அடிகள் இத்திரட்டில் சேர்க்கப்பெறவில்லை.