உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும்

பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே.

நானில வளமும் நண்ணிய சேரன்

1479. நாட னென்கோ வூர னென்கோ

பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ

யாங்கன மொழிகோ வோங்குவாட் கோதையைப்

புனவர் தட்டை புடைப்பி னயல

திறங்குகதி ரலமருங் கழனியும்

பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே.

எமக்குத் திங்கள்; பகைக்கு ஞாயிறு

1480. ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற் றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி வல்லை மன்ற நீநயந் தளித்தல் தேற்றாய் பெரும பொய்யே யென்றுங் காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும் ஞாயி றனையைநின் பகவைர்க்குத் திங்க ளனையை யெம்ம னோர்க்கே.

இன்னா மண்கொண் டினிதுசெயல் அறனோ?

1481. பாணர் தாமரை மலையவும் புலவர்

பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறல்மாண் குடுமி

இன்னா வாகப் பிறர்மண்கொண் டினிய செய்திநின் னார்வலர் முகத்தே.

ஒப்ப நாடி அத்தக வொறுத்தல்

1482. வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின்

439