உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

இளங்குமரனார் தமிழ் வளம் 17 ஒப்ப நாடி யத்தக வொறுத்தி வந்தடி பணிந்து முந்தை நிற்பின் தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே.

-புறநானூறு 54, 8, 49, 59, 12, 10

களிற்று வெளிலில் கான மஞ்ஞை

1483. களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி உரைசா லோங்குபுக ழொரீஇய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே.

குன்றம் பாடிக் கொண்டதோ களிறு?

1484. மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ

களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே.

மாரி யன்ன தேர்வேள் ஆஅய்

1485. மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது காண்பறி யலையே 'காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக்

கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி

3

மாரி யன்ன வண்மைத்

தேர்வே ளாயைக் காணிய சென்மே.