உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் 1486. இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிக 4னாஅ யல்லன் பிறருஞ், சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட் டன்றவன் கைவண் மையே.

441

-புறநானூறு 127, 131, 133, 134

அரிசி கேட்க யானை தருவதோ?

1487. தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினெ மாகத் தான்பிற

வரிசை யறிதலாற் றன்னுந் தூக்கி

இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர்

தேற்றா வீகையு முளதுகொல்

போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே.

கேள்விக் கினியனும் கண்ணுக் கினியனும்

1488. நீயே, அமர்காணி னமர்கடந்தவர்

1

படைவிலக்கி யெதிர்நிற்றலின்

வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின் னாயே

அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின் ஊறறி யாமெய் யாக்கையொடு

கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே

அதனால், நீயுமொன் றினியை யவருமொன் றினியர் ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க்

கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி

1. காண்டல் சாலவேண்டினை யாயின்.

3. வண்கைத்.

2. LOIT600TL.

4. னாயலன் பிறரும்.