உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நின்னை வியக்குமிவ் வுலகமஃ

தென்னோ பெரும வுரைத்திசி னெமக்கே.

-புறநானூறு 140, 167

இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்

2

1489. ஓரை யாயத் தொண்டொடி மகளிர் கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின் யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத் தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம் இழுமென வொலிக்கும் புனலம் புதவிற் பெருமா விலங்கைக் கிழவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் ஒரூ ருண்மையி னிகழ்ந்தோர் போலக் காணாது கழிந்த வைகல் காணா வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன் கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே.

கொல்லனை இரக்கும் வல்லாண் மையோன்

1490. நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே இறையுறு விழுமந் தாங்கி யமரகத்

திரும்புசுவைக் கொண்ட விழுப்புணோய் தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந் தீர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்

இன்மை தீர வேண்டி னெம்மொடு

நீயும் வம்மோமுதுவா யிரவல

யாந்தன் னிரக்குங் காலைத் தானெம்

உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்

கருங்கைக் கொல்லனை யிரக்குந்

திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே.

1. ஒல்லா. 2. (த்) தலைவன்.