உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

இளங்குமரனார் தமிழ் வளம் 17 மேவலன் பிறர்பிறர்க் கீந்து

தானு முண்ணும் விருந்துண்டு மிகினே.

-ஆசிரியமாலை

130. பரிசில்

(பரிசில் பெற்றார் தாம் பெற்ற பரிசில் சிறப்பையும் அதனை வழங்கியோன் வண்மைச் சிறப்பையும் கூறுதல்.

மேற்: தொல். பொருள். 90. பு.வெ.மா.213;214)

உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம்

1494. வளிநடந் தன்ன 'விரைசெல லிவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினி ரெனாஅக் கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றினி ரெனாஅ உருமுடன் றன்ன வுட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியி ரெனாஅ மண்கெழு தானை யொண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே எம்மால் வியக்கப் படூஉ மோரே

இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்குற் றடகு புன்புல வரவின் சொன்றியொடு பெறூஉஞ் சீறூர் மன்ன ராயினு மெம்வயிற்

பாடறிந் தொழுகும் பண்பி னோரே

மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும்

உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளே நல்லறி வுடையோர் நல்குர

வுள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே.

1. வாச்செல.

2. கொழுங்கட் குற்றடகு.