உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

இளங்குமரனார் தமிழ் வளம் 17

சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணீர் மருங்கி னதர்பல வாகும் புள்ளும் பொழுதும் 'பழிப்பி னல்லதை உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற் புலவேன் வாழிய ரோரி விசும்பிற் கருவி வானம் போல

வரையாது கீசுரக்கும் வள்ளியோய் நின்னே.

கடவன் பாரி கைவண் மையே

1498. நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப் புல்லிலை யெருக்க மாயினு முடையவை கடவுள் பேணே மென்னா வாங்கு மடவர் மெல்லியர் செலினுங் கடவன் பாரி கைவண் மையே.

மலையற் பாடியோர் வறிது பெயரார்

1499. நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது 3பெயர்குவ ரல்லர் ‘நெறிகொளப் பாடான் றிரங்கு மருவிப்

பீடுகெழு மலையற் பாடி யோரே.

-புறநானூறு 204, 106, 124

131. வாழ்த்து

("நீவழிபடும் தெய்வம் நின்னைக் காக்க, நின் வழிவழி மிகுவதாக” என வாழ்த்திக் கூறியது.

மேற்: தொல். பொருள் 88.பு.வெ.மா. 226)

மாமலை போல மன்னி வாழ்க

1500. கொடிவிடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக் கடிவிடு கொன்றையோன் காக்க - நெடிதுலகிற்

1. பழித்த லல்லதை.

3. பெயர்குந.

2. காக்கும்.

4. வெறிகொளப்.