உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற மாமலைபோல் மன்னுக நீ.

447

-புறப்பொருள் வெண்பாமாலை 226

சென்னிச் செல்வ மன்னுக நெடிதே

1501. கண்ணுதலோன் காக்க கடிநேமி யோன்காக்க

எண்ணிருந்தோ ளேந்திழையாள் தான்காக்கப் - 'பண்ணியனூற்

சென்னியர்க் களிக்குஞ் செல்வனீ

மன்னுக நாளுமிம் மண்மிசை யானே.

-பெரும்பொருள் விளக்கம்

செந்தில் மணலினும் சிறக்க வாணாள்

1502. ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்

பிறைநுதல் விளங்கு மொருகண் போல

வேந்துமேம் பட்ட பூந்தார் மாற

கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய பரிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவருமெனு

நான்குடன் மாண்ட தாயினு மாண்ட

அறநெறி முதற்றே யரசின் கொற்றம் அதனால், நமரெனக் கோல்கோடாது பிறரெனக் குணங்கொல்லாது

க்

ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந் திங்க என்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையு மூன்றும் உடையை யாகி யில்லோர் கையற நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்

1. பண்ணியநூற்