உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

5.

6.

புறத்திரட்டு

வாழும் பொழுதே வானெய்த வழிகள் தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து

தண்டூன்றித் தளர்வார் தாமும்

சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதிக்கட் சுழல்வார் தாமும்.

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த

வினையென்று முனிவார் தாமும்

வாழ்ந்த பொழுதினே வானெய்து

நெறிமுன்னி முயலா தாரே.

453

-யாப். வி. 94; யா.கா. ஒழி. 7; நன். 415, மயிலை. 2. (12) செய்ந்நன்றியறிதல்

ஒருவரூ னுண்டார் பிறர்க்குரித் தாகார்

முன்னொருவன் செய்யு முபகாரம் மூவுலகுந் தன்னைக் கொடுத்தாலுஞ் சாலுமே - யென்னே உயிர்க்குறுதி யாக வொருவர்சோ றுண்டார் பிறர்க்குரிய ராவரோ பேசு.

-(பாரதவெண்பா) பெருந்தொகை - 290

3. (14) அடக்கமுடைமை

கடுஞ்சொல் அரவங் கடிக்கும் நல்லரை

கல்லார் வாயிற் கடுஞ்சொல்லாங் காரரவு

நல்லாரைச் சென்று நனிகடிக்குஞ் - சொல்லாவோர் மந்திரமு மில்லை மகிதலத்தே மற்றுமொரு

தந்திரமு மில்லையதன் சால்பு.

-வீரசோ. அலங். 23. மேற்.

() இக்குறியிலுள்ள எண் புறத்திரட்டிலுள்ள அதிகாரத்தைக் குறிப்பது.