உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.

12.

13.

14.

புறத்திரட்டு

உவர்க்கடல் தன்னினும் ஊற்றே உயர்வு

உவர்க்கட லன்ன செல்வரு முளரே

கிணற்றூற் றன்ன நீயுமா ருளையே

செல்வர்தாம் பெருந்திரு வுறுக பல்பகல்

நீவா ழியரோ நெடிதே யீயாச்

சிறுவிலைக் காலத் தானு

முறுபொரு டந்தெஞ் சொற்கள் வோயே.

455

-நன்னூல் 268 மயிலை. மேற்.

5. (26) புகழ்

ஈதல் இசைபடல் ஊதிய மாகும்

எய்தற் கரிய வியன்றக்கா லந்நிலையே செய்தற் கரிய செயலென்று - வையகத் தீத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு.

-

- யாப்.வி. 60. மேற்.

பொருளைப் பொழிவார் மேலே புகழாம்

வெய்ய குரற்றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும் பெய்யு மழைமுகிலைப் பேணுவரால் - வையத் திருள்பொழியுங் குற்றம் பலவெனினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ்.

வீரசோ. அலங். 20 மேற்.

கல்லார் நாவிற் கட்டுரை கொள்ளேல்

கல்லார் நாவிற் கட்டுரை கொள்வார் - புகழெய்தார் புல்லார் வாயிற் சொற்றெளி வுற்றார் - புகழெய்தார் நல்லார் மேவு நண்பு துறந்தார் - புகழெய்தார் இல்லா ராய்நின் றின்ப முவந்தார் – புகழெய்தார்.

-வீரசோ. யாப். 15 மேற்.