உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

30.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கொடியன குன்றத்தின் மாளிகையே யன்றிக் கடியவிழ்பூங் காவு முள.

இரங்கி யொலிப்ப தின்குரல் யாழே

வெண்ணீர்மை தாங்குவன முத்தே வெளியவாய்க் கண்ணீர்மை சோர்வ கடிபொழிலே - பண்ணீர மென்கோலி யாழே யிரங்குவன வேல்வேந்தே நின்கோ னிலவு நிலத்து.

-தண்டி. 75. மேற்.

தங்குறை நீக்கிப் பிறர்குறை தீர்த்தல்

31. திருக்கொண்டு பெருக்கமெய்தி வீற்றிருந்து

குற்றங்கெடுத்து விசும்புதைவரக் கொற்றங்குடை யெடுப்பித்து

நிலநெளியப் படைபரப்பி

ஆங்காங்கு களிறியாத்து

நாடுவளம் பெருகக் கிளைகுடி யோம்பி

நற்றாய் போல வுற்றது பரிந்து

நுகத்துக்குப் பகலாணி போலவும்

மக்கட்குக் கொப்பூழ் போலவும்

உலகத்துக்கு மந்தரமே போலவும் நடுவுநின்று செங் கோலோச்சி யாறில்வழி யாறுதோற்று வித்துக்

குளனில்வழிக் குளந் தொடுவித்து

முயல்பாய்வழி கயல்பாயப் பண்ணியும் களிறுபிளிற்றும்வழிப் பெற்றம் பிளிற்றக் கண்டும் களிறூர் பலகால் சென்றுதேன் றோயவும் தண்புனற் படப்பைத் தாகியும்

குழைகொண்டு கோழியெறிந்தும்

இழைகொண்டான் றட்டும்

இலக்கங்கொண்டு செங்கானாரையெறிந்தும்

உலக்கைகொண்டு வாளையோச்சியும்

தங்குறை நீக்கியும் பிறர்குறை தீர்த்தும்

நாடாள்வதே யரசாட்சி.

-யாப்.வி. 93. மேற்.