உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.

33.

34.

புறத்திரட்டு

13. (69) தாளாண்மை 13.(69)

முயன்றால் முடியாப் பொருளெதும் இல்லை

தண்டுறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு புண்டரிக நின்வதனம் போன்றதால் - உண்டோ பயின்றா ருளம்பருகும் பான்மொழியாப் பார்மேல் முயன்றால் முடியாப் பொருள்.

461

-தண்டி. 87. மேற்.

யானைக் கோடு பீலியாய்ப் போவதேன்?

தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்

பீலிபோற் சாய்த்து விடும்பிளிற்றி யாங்கே.

14. (98) பெருமை

-யாப். வி. 67 மேற்.

பெருமை போற்றுவார் பிறங்கி நிற்பார்

நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே

செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணுஞ் சால்பினும்

35.

மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்.

-நீலகேசி. 51 மேற்.

குற்ற முடையருட் குணத்தோர் பலரால்

காதன் மதியங் களங்கமுடைத் தானாலும் பூதலத்தை யெல்லாம் பொலிவிக்கும் - ஓதுசில குற்ற முடையா ரெனினுங் குவலயத்துள்

நற்றகையார் நல்லரென்றே நாடு.

-வீரசோ. அலங். 30 மேற்.