உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

36.

37.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 பெரியோர் பிழைப்பின் பேருல கறியும் பெரியோ ருழையும் பிழைசிறிதுண் டானும் இருநிலத்தில் யாரு மறிதல் - தெரிவிக்கும் தேக்குங் கடலுலகில் யாவர்க்குந் தெள்ளமுதம் வாக்கு மதிமேன் மறு.

-

வீரசோ. அலங். 32. மேற்.

பெரியோர் கடமை பிறிதுயிர் காத்தல்

எண்ணும் பயன்தூக்கா தியார்க்கும் வரையாது

மண்ணுலகில் வாமன் அருள்வளர்க்கும் - தண்ணறுந்தேன் பூத்தளிக்குந் தாராய் புகழாளர்க் கெவ்வுயிரும்

காத்தளிக்கை யன்றோ கடன்.

-வீரசோ. அலங். 20. மேற்.

பெரியோர் பெருமையைப் பேசும் உலகம்

38.

உலகினுட்.

39.

பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும் இருந்தகைய 'இறுவரைமே லெரிபோலச் சுடர்விடுமே சிறுதகையார் சிறுதகைமை சிறப்பென்றும் பிறழ்வின்றி யுறுதகைய வுலகிற்கோ ரொப்பாகித் தோன்றாவே.

-யாப்.வி. 94. மேற்.

15. (109) நிரைகோடல்

ஒருவர் ஒருவர் உணராச் செலவு

ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு.

1. இருவரைமேல்.

-தொல்.பொருள். 58. நச். மேற்.