உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40.

41.

42.

43.

44.

45.

புறத்திரட்டு

மள்ளர் பதிந்தார் மயு மிவ்வூர்

கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் பதிந்தா - ரரந்தை

விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி யெரிந்தவியும் போலுமிவ் வூர்.

கொல்வார்ப் பெறாஅர் கொதித்து நின்றார்

அரவூர் மதியிற் கரிதூர வீம

விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து.

ஒத்த வயவர் ஒருங்கவி நிலைமை

ஒத்த வயவர் ஒருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் தாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில்.

கானெலாம் வளைந்த ஆநிரைப் பெருக்கம்

குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங் களிறொதேர் காண்டலு மாற்றா - நளிமணி

நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம்.

மள்ளர் வருக வாயிற் கடைக்கே

கடிமனைச் சீறூர்க் கடுங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லொட்டா னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை.

வேவுரைத் தார்க்கு வேண்டுஞ் சிறப்பு மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே யேற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற்

463